ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பின் எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 616 உயர்வு

சென்னை: ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பின் எதிரொலியாக தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 616 உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 43,320 விற்கப்படுகிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் தங்கம் வெள்ளி விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது இந்நிலையில் பட்ஜெட்டில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டிருப்பதால் தங்கம் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

22 கிரேட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 55 உயர்ந்து 5,415 விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ரூ. 42,704 விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 616 உயர்ந்து ரூ. 43,320க்கு விற்கப்படுகிறது. இதைபோல் வெள்ளி விலை கிராம் ரூ. 76க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 76,000க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்கும் மற்றம் காரணமாக கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 616 வரை அதிகரித்துள்ளது. தங்கம் விலை உயர்வு ஏழை நடுத்தர மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்திருக்கிறது.    

Related Stories: