×

4 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியான பட்ஜெட்; ஒன்றிய பட்ஜெட் 2023-ல் ஏழைகளுக்கு ஏதும் இல்லை: காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள ஒன்றிய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டுக்கு தொடரும் என்று பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

ஒன்றிய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பட்ஜெட்டானது, 4 மாநிலங்களில் வரவிருக்கிற சட்டசபை தேர்தலை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. அரசு காலி பணியிடங்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழான திட்டங்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதேபோல், வேலைவாய்ப்பை பெருக்கவோ, காலியாக உள்ள அரசு பணிகளை நிரப்பவோ, மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் குறித்தோ இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

Tags : Union , 4 Budget released ahead of state assembly elections; Nothing for the poor in Union Budget 2023: Congress Criticism
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...