×

மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை; இது ஒரு ’கறுப்பு’ பட்ஜெட்: மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பட்ஜெட் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்; நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த கருத்தும் இடம் பெறவில்லை. 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட் எதிர்காலம் சார்ந்து எந்த அம்சமும் இல்லை. இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வை கொண்டது அல்ல. சந்தர்ப்பவாத பட்ஜெட் இது. மக்கள் விரோதமான, ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் இது. ஏழைகளுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

இந்த பட்ஜெட் ஒரு தரப்பு மக்களுக்கே பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது. தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு எந்த வித பயனையும் அளிக்கப் போவதில்லை. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கையளிக்ககூடிய எந்த அம்சமும் இல்லை. இது ஒரு ‘கறுப்பு’ பட்ஜெட். எனக்கு ஒரு அரைமணி நேரம் தாருங்கள், ஏழைகளுக்கு எப்படிப்பட்ட பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்று உங்களுக்கு காண்பிக்கிறேன் எனவும் கூறினார்.


Tags : Union Budget ,Mamata Banerjee , There is nothing in the Union Budget to reassure people; It's a 'black' budget: Mamata Banerjee
× RELATED இந்தியா கூட்டணி நாளையே ஆட்சி அமைக்க...