சென்னை: இந்தியாவிலேயே அதிகபச்சமாக மாசுப்பட்ட ஆறு என கூவம் ஆறு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாமிரபரணி காவேரியும் மாசுப்பட்டு வருகிறது என எச்சரித்து உள்ளனர். பெயரை கேட்டலே மூக்கை பிடிக்கும் அளவிற்கு மாசுப்பட்டு கிடக்கிறது கூவம் ஆறு. இப்பொழுது இது தான் இந்தியாவிலேயே அதிகமான மாசுப்பட்ட ஆறு என பட்டியில்லிட்டு உள்ளது ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அளித்துள்ளது.
இந்தியாவின் நதிகள் எவ்வாறு மாசுபட்டுள்ளது என்பது தொடர்பாக 2018 தொடங்கி 2022 வரையில் விரிவான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய மாசுகட்டுப்பட்டு வாரியம். நாடு முழுவதும் 603 ஆறுகளில் ஆய்வை செய்து இருப்பதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 279 ஆறுகளில் 311 இடங்கள் மாசுபட்ட பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு என கூவத்தை பட்டியலிட்டுள்ளது. ஆவடி முதல் சத்யாநகர் வரையில் கூவம் ஆற்று நீரில் BOD அளவு ஒரு லிட்டருக்கு 345 மில்லி கிரமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. BOD என்பது மாசுபட்ட நீரை தூய்மையான நீராக்க தேவைப்படும் ஆக்சிஜன் அளவை கணக்கிடுவது, அதாவது ஆற்றில் எடுக்கப்படும் நீர் தூய்மையான நீராக குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால் அது குறைவான மாசு எனவும் அதுவே அதிகமான அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால் அதிகமாக மாசு அடைந்துள்ளது எனவும் கணக்கிடப்படும்.
இந்தியாவில் இரண்டாவதாக அதிகம் மாசடைந்த அறுகளாக உள்ள குஜராத்தின் சபர்மதியில் எடுக்கப்பட்ட 1 லிட்டர் நீர் நல்ல நீராக மாற 292 மில்லி கிராம் அளவு ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும், உத்தரப்பிரதேசத்தின் பகிலாவில் எடுக்கப்பட்ட நீர் நல்ல நீராக மாற 287 மில்லி கிராம் ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆறுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன, அதில் 10 ஆறுகள் மாசுபட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாறு, அமராவதி, பாவனி, காவிரி, கூவம், பாலாறு, சரபங்கா, வசிஷ்ட ஆறு திருமணிமுத்தாறு, மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகள் மாசுபட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அரசு ஆறுகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கை சோலையில் ஆர்வலர்களால் முன்வைக்கப்படிருகிறது.