ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்: அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி

சென்னை: உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானியை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி. 10வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி தற்போது 9வது இடத்துக்கு முன்னேறி அதானியை 10வது இடத்துக்கு தள்ளினார். அதுமட்டும் இன்றி அதானி நிறுவனத்தை ஆர்பிஐ, செபி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பங்குச்சந்தை மோசடி விவகாரம் தொடர்பாக அதானி நிறுவனத்தை ஆர். பி. ஐ மற்றும் செபி விசாரிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை எழுப்பியுள்ளார்.

கருப்புப்பணம் பற்றி பேசும் ஒன்றிய அரசு, அதானியின் சட்டவிரோத செய்லகளை பார்த்து கண்ணை முடிகொண்டிருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதானி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். அதானி குழும பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, அதானி வில்மர் பங்கு விலை 2.25%, அதானி போர்ட்ஸ் பங்கு விலை 1.33% வீழ்ச்சி அடைந்துள்ளது. 

Related Stories: