×

நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு; புதிய விமான நிலையங்கள் அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம்

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது:
* அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் தரும் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு

* மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரி.1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

* கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி ஒதுக்கீடு

* 50 விமான நிலையங்கள், துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டம்

* புதிய விமான நிலையங்கள் அதானிக்காக அமைக்கப்படுகிறதா என எதிர்க்கட்சிகள் முழக்கம்

* மூலதன முதலீடு 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

* நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.யில் மூலதன முதலீட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வரும் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ஒன்றிய அரசு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு

* நாடு முழுவதும் சாலை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு

* முக்கியமான 100 போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு

* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சிறப்பு மையம் அமைக்கப்படும், 3 கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்

* நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீடு,

* பல துறைகள் தொடர்பான நிதி பரிவர்த்தனைகளுக்கு நிரந்தர கணக்கு எண் (பான்) பாண் பயன்படுத்துவது அறிமுகப்படுத்தப்படும்

* ரூ.7,000 கோடியில் மின்னணு நீதிமன்றம்களை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது

* நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் ஒட்டுமொத்தமாக எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை

* இயற்கை வைரம் போலவே தன்மைகள் கொண்ட செயற்கை வைரத்தை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த தொழில்களில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்


Tags : Atanika , 50 new airports, announcement in budget, airports Atanika, opposition slogans
× RELATED நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த...