வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்..!!

விழுப்புரம்: வேளாண்சாகுபடி பாசன வசதிக்காக விக்கிரவாண்டி வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஆண்டுதோறும் வீடூர் அணையிலிருந்து தண்ணீரானது பிப்ரவரி மாதம் திறந்துவிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் உத்தரவு படி இன்று காலை வேளாண் பாசனத்திற்கு தண்ணீரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தா.மோகன் தொடங்கிவைத்தார். வீடூர் அணை 32 அடி கொள்ளளவை கொண்டது தற்போது நீர் திறப்பால் 31 அடியாக உள்ளது.

விவசாயிகளின் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீரானது பயிர் சாகுபடிக்கு 135 நாட்கள் திறக்கப்பட உள்ளது. 328.56 மில்லியன் கன அடி தண்ணீரானது திறந்து விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள வானுர் வட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள சிறுவை உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள 2200 ஏக்கரும் புதுவை மாநிலத்தில் 1000 ஏக்கரும் மொத்தம் 3200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவதால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். தொடர்ந்து தண்ணீரானது திறக்கப்பட்டு விவசாய பாசனத்திற்கு சென்றுள்ளதால் மக்களும், விவசாயிகளும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: