பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 5வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசின் முழு பட்ஜெட்டாக இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, இவரது 5வது பட்ஜெட்டாகும். இதில், வரிச்சலுகை, தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படும் என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தநிலையில், டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் ஜனாதிபதியுடன் சந்தித்தனர். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார். பட்ஜெட் தாக்கலுக்கு முன் ஜனாதிபதியை சந்திப்பது நடைமுறை ஆகும். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு பட்ஜெட் ஆவணங்களுடன் வந்தார். பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்ய பிரதமர் மோடியிடம் அனுமதி கோருகிறார் நிர்மலா சீதாராமன். ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

Related Stories: