×

'கள ஆய்வில் முதலமைச்சர்'திட்டத்தை தொடங்க வேலூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் புறப்பட்டார். வேலூர் மண்டலத்தில் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக இன்று, நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வேலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம் செல்கிறார். இன்று மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு நடத்துகிறார். மாவட்டந்தோறும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களையும் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,Vellore ,G.K. Stalin , Chief Minister, Vellore, Chief Minister M.K.Stalin in the field survey
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...