மனுநீதி நாள் முகாமில் 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு 44 பயனாளிகளுக்கு ரூ.6.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்துக்குட்பட்ட பீர்க்கன்காரணை பகுதியில் மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடந்தது. முகாமில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மண்டல குழு தலைவர் டி.காமராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

முகாமில், 44 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, 44 பயனாளிகளுக்கு, ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழஙகப்பட்டன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 23 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதை கலெக்டர் ராகுல்நாத், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மண்டல குழு தலைவர் டி.காமராஜ் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சங்கர், ஹேமாவதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், வட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: