ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2 பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இம்மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இதில் போட்டியிடுவதற்கு பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இம்மாதம் 7ம் தேதியுடம் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து பிப்.27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பொதுப்பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் மற்றும் காவல் பார்வையாளராக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் சதிவேவ் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: