×

தியேட்டரும் இல்லை; ஓடிடியும் இல்லை சிறு படங்களை வாங்க ஆளில்லை: இயக்குனர் பா.ரஞ்சித் வருத்தம்

சென்னை: சிறு படங்களை தியேட்டரிலும் திரையிட முடியவில்லை, ஓடிடியிலும் வெளியிட முடியவில்லை என்றார் இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித். இது குறித்து பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியது: பொம்மை நாயகி என்ற படத்தின் கதை மீதிருந்த நம்பிக்கையால் சிறு பட்ஜெட்டில் இதை தயாரித்துள்ளேன். ஆனால் சிறு படங்களுக்கு இப்போது வணீக ரீதியாக எந்த வரவேற்பும் இல்லை. தியேட்டர்கள் கிடைக்காத சூழல் உள்ளது. ஓடிடியை நாடிச் சென்றால் அவர்களும் சிறு படங்களை வாங்க தயங்குகிறார்கள். ஓடிடி நிறுவனம் ஒரு வருடத்துக்கு 12 படங்கள் வாங்குகிறது என்றால் அந்த 12 படங்களும் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய படங்களாக இருக்கிறது. சிறு படங்களை வாங்காமல் காக்க வைக்கிறார்கள்.

தியேட்டர்களிலும் இந்த நிலைதான் இருக்கிறது. இதனால் சிறு படங்கள் ஓடுவதில்லை. லவ் டுடே போன்ற சில படங்கள் மட்டும் எப்போதாவது சாதித்து விடுகிறது. அதுபோல் சாதிக்கும் என்ற ஆசையில் எடுக்கப்படும் பல படங்கள், ஓரம்கட்டப்படுகிறது. இவ்வாறு ரஞ்சித் கூறினார். ‘அதே சமயம், நல்ல கதையம்சத்துடன் எடுக்கப்படும் சிறு பட்ஜெட் படங்கள் பல ஓடிடியில் வெளியாகிறது. இதற்கு மலையாள படங்களே சாட்சி. அதுபோல் படம் எடுத்தால் கண்டிப்பாக ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்’ என சமூக வலைத்தளத்தில் பா.ரஞ்சித்தின் கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி தந்து வருகிறார்கள்.


Tags : Pa. Ranjith , No theater either; There is no OTD and no one buys short films: Director Pa. Ranjith regrets
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி