கனடாவில் இந்து கோயில் சேதம்

டொராண்டோ: கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள கவுரி சங்கர் இந்து கோயில் சேதம் செய்யப்பட்டதற்கு இந்திய தூதரகம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பிராம்ப்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற கவுரி சங்கர் கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு டொரொண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகம் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “கவுரி சங்கர் கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது கனடாவில் உள்ள இந்திய மக்களின் மனதை மிக ஆழமாக புண்படுத்தியுள்ளது.  ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராம்ப்டன் நகர மேயர் பெட்ரிக் பிரவுன் கவுரி சங்கர் இந்து கோயில் அவமதிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்  காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்த செயல்களை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: