×

2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டி: முன்னாள் அதிபர் சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேனா 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கையில் 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை அதிபராக இருந்தவர் மைத்ரிபால சிறிசேனா. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்தது. ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய உள்ளூரை சேர்ந்த நேஷனல் தவ்ஹத் ஜமாத் நடத்திய இந்த தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் அப்போது அதிபராக இருந்த சிறிசேனா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொழும்புவில் நடந்த சுதந்திரா கட்சியின் அரசியல் குழுக்கள் கூட்டத்தில் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டார். அப்போது பேசிய சிறிசேனா, மற்றவர்கள் செய்த காரியத்துக்காக கத்தோலிக்க சமூகத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். மேலும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில்தான் போட்டியிட போவதாகவும் முன்னாள் அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

Tags : 2024 ,election ,Former president ,Sirisena , Contest in 2024 presidential election: Former president Sirisena announced
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...