×

தோழமை அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தோழமை, நட்பு என்ற அடிப்படையில் அனைவரிடமும் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் களத்தில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம் என்று மாஜி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாக நடத்த வேண்டும் என்ற வகையிலே தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அவரும் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். போலி வாக்காளர் அடையாள அட்டையை அனுமதிக்கக்கூடாது. இதனை ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

வழக்கமாக, தேர்தல் தேதி அறிவித்தவுடனே அதிமுக வேட்பாளாரை அறிவிக்கும் நிலை இருந்ததே என்று கேட்கிறீர்கள். களத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். வெற்றி பெறப்போவது நாங்கள்தான். தேர்தல் ஆணையம் அறிவித்த காலத்திற்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். வேட்புமனு செய்வதற்கு  நாள் உள்ளது. எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்துகொண்டுதான் உள்ளது. அனைத்தும் சுமூகமாக முடியும். பாஜ கட்சியினர் வேலை செய்வதற்கு கமிட்டி போடுவார்கள். இது தொன்றுதொட்டு அனைத்து கட்சியும் செய்வது வழக்கம்தான். தோழமை, நட்பு என்ற அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம். எனது வழக்கில் அதாவது சகோதரர்கள் வழக்கில் மட்டும் அரசு துரிதமாக செயல்படுகிறது. என் வழக்கு மீது மேல் முறையீடு செய்கிறார்கள். நீங்கள் எங்கு சென்றாலும் நீதியை நிலைநாட்ட எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : minister ,Jayakumar , Negotiations are going on with everyone on the basis of friendship, even if it comes late, we will come at the latest... Interview with former minister Jayakumar
× RELATED அமைச்சர்போல் நினைத்து செயல்படும்...