2 யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார் சார்பில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என்னை பற்றியும், எனது குடும்பத்தினரை பற்றியும், கலைத்துறையினரை பற்றியும் 2 யூடியூப் சேனல்கள் தவறாக சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோவை வெளி யிட்டிருக்கிறது. கலைத்துறையினர் பலரையும் இழிவுபடுத்தி உண்மைக்கு புறம்பாக கற்பனை செய்திகளை தவறான நோக்கத்தில் தொடர்ந்து வீடியோவாக பதிவு செய்துள்ளது. எனது புகழுக்கு வீணான களங்கம் கற்பித்து, தனிப்பட்ட முறையில் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும், அதிவிரைவில் கண்டறிந்து மிகத்தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைத்துறையினரை தவறாக சித்தரிக்கும் இதுபோன்ற யூடியூப் சேனல்களை முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: