திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சகோதரி மறைவு

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சகோதரி பவுனம்மாள், காலமானதை தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை தளிக்கோட்டையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மூத்த சகோதரியும், சென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் கோ.செங்குட்டுவனின் துணைவியாருமான பவுனம்மாள்(88), நேற்று பிற்பகல் மறைவெய்தினார். அவரது உடல், இன்று காலை 11 மணி வரை மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன் பின்னர், அவரது சொந்த ஊரான தளிக்கோட்டையில் மாலை 4 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும்.

Related Stories: