கெடு முடிந்துவிட்டது உங்களுக்கு ஊசி எங்களுக்கு பாசிமணி: எடப்பாடிக்கு கு.ப.கிருஷ்ணன் சவால்

கரூரில் முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணி ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: கையிலே வெண்ணையை வைத்துக்கொண்டு தொன்னைக்கு அலைவது போல இபிஎஸ், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு தொன்னைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். நீங்கள் யாரை வேட்பாளராக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். யாருக்கு இரட்டை இலை சின்னம் தரவேண்டும் என சொல்கிறீர்களோ ஓபிஎஸ், அதற்காக கையெழுத்து போட்டுத் தருவார். ஓபிஎஸ்சின் கையெழுத்தே வேண்டாம், இந்த கட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைத்தால் அவர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி நல்ல பாடத்தை கற்றுத்தரும்.

அந்த கெடு இன்று (நேற்று) இரவு 12 மணியோடு முடிகிறது. காலம் கடத்தப்படும் என்று சொன்னால், நீங்கள் ஊசியில் நில்லுங்கள். நாங்கள் பாசிமணியில் நிற்கிறோம். மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பார்த்து விடுவோம். ஓபிஎஸ் மற்றும் உடன் இருக்கும் நாங்கள் அனைவரும் எம்ஜிஆருடன் பயணித்தவர்கள். எம்ஜிஆரை இபிஎஸ் பார்த்ததே இல்லை. எங்களை யாரும் இயக்கவில்லை. பாஜ இந்த மண்ணுக்குள் வருவதற்கு முன்னே 72ல் இருந்து மக்களின் நாடியை பிடித்து பார்த்தவர்கள். எவருடைய தயவும் எங்களுக்கு தேவையில்லை. இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் கூறினார்.

Related Stories: