ஓபிஎஸ்சுக்கு நாட்டு நடப்பு தெரியல: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கு

ஈரோடு: ஓ.பன்னீர்செல்வத்திற்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஈரோடு கருங்கல்பாளையத்தில்  திமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நிருபர்களுக்கு பேட்டி: தமிழகத்தில் மருத்துவ துறையில் இயக்குனர் பணியிடம், மருத்துவக்கல்லுாரிகளில் டீன் பணியிடம் நிரப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அவருக்கு  நாட்டு நடப்பு தெரியவில்லை என நினைக்கிறேன். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லை என்று அவர் சொன்னால், அவருக்கும், கவர்னருக்கும்தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே அவர், கவர்னரிடம் சென்று கேட்க வேண்டியதுதானே. எந்த மருத்துவமனையில், எந்த மருந்து இல்லை என பன்னீர்செல்வம் கூறினால், உடனடியாக அம்மருந்தை அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு  மா.சுப்பிரமணியன் கூறினார்.

* குட்கா மீது தடை விதிக்க தனி தீர்மானம்

கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், குட்கா மீதான தடையை கோர்ட் நீக்கியுள்ளது. போதை பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து முழுமையாக ஒழிப்பதில் தமிழ்நாடு அரசு குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தமிழ்நாடு சட்ட பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: