×

போடி அருகே ஒண்டிவீரப்பசாமி கோயில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

போடி : போடி அருகே உள்ள ஒண்டிவீரப்பசாமி கோயில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி அருகே தேவாரம் சாலையில் ராசிங்காபுரத்தில் 7000க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாய கூலி வேலை பார்க்கின்றனர்.ராசிங்காபுரத்தில் இருந்து 7 வது கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்தில் ஒண்டிவீரப்பசுவாமி கோயில் உள்ளது. மேலும் இந்த மலை அடிவாரத்தில் சுமார் 10 ஆயிரத்திற்க்கும் மேலான மானாவாரி நிலங்களும் உள்ளன. ஆழ்குழாய் மற்றும் மழை நீர்பாசனம் மூலமாக சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலக்கடலை, சோளம், ஆலைக் கரும்பு, தென்னை, காய்கறிகள், தக்காளி, மொச்சை, துவரை, உளுந்து என விதைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

மலையிலிருந்து மழைக்காலங்களில் ஒண்டிவீரப்பன் கால்வாயில் பல அருவிகளாக உருண்டு சேர்ந்து பெருக்கெடுக்கும் காட்டாறு வெள்ளம் சரியாக 7 வது கிலோ மீட்டரில் உள்ள ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடும். மேலும் கடந்த 8 ஆண்டுக்கு முன்பாக போடி கூலிங்காற்றில் சென்று சேரும் நீடிப்பு 18ம் கால்வாயிலும் மழைநீர் சேரும்.தற்போது இந்த ஒண்டிவீரப்பசாமி கால் வாய் பகுதியினை பலரும் ஆக்கிரமித்து தங்களின் நிலங்களுடன் சேர்த்துள்ளனர். சிலர் கால்வாயினை ஆக்கிரமித்து அப்பகுதியில் கருங்கற்களை கொண்டு இரும்பு முள் வேலிகள் அமைத்து யாரும் செல்ல முடியாதளவிற்கு தடை செய்து வை த்துள்ளனர்.

இதனால் இந்த பகுதியில் அன்றாடம் ஆடுகள் மாடுகள் வளர்க்கும் விவசாயிகளும் கால்நடைகள் வளர்ப்போர்களும் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். போடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து இந்த ஒண்டிவீரப்பன்சாமி கால்வாயின் ஒரு பகுதியில் மழை நீர் தேக்கி நிலத்தடி நீர் ஊற்றெடுப்பதற்கு கடந்த மாதத்தில் மெகா தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த ஒண்டிவீரப்பசாமி கால்வாய் ஆக்கிரமித்து வேலி போட்டு தடுத்துள்ளதால் மழைநீர் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு ஆக்கிரப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ராசிங்காபுரம் ஒண்டி வீரப்பசாமி கோயில் பகுதியில் மலை அடிவாரத்தில் நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் பாசனத்தில் தொடர் விவசாயம் செய்கிறோம். ஒண்டி வீரப்பசாமி கால் வாய் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக உள்ளது.ஒரு கிலோ மீட்டருக்கு மேல் ஆக்கிரமித்து முள்வேலிகளை வைத்து அடைத்துள்ளதால் மழை நீர் கடப்பதற்கு தடங்கல் உள்ளது.அரசு துறை அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து விவசாயம் காக்கவும் பொதுமக்களுக்கு குடி நீர் கிடைக்கவும் கால்வாய் ஆக்கிரமிப் புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Ondiveerappasamy ,Bodi-Farmers , Bodi: Farmers have demanded that the encroachment of the Ondiveerappasamy temple canal near Bodi be removed.
× RELATED போடி அருகே அதிமுகவினர் தலையீட்டால்...