சென்னையில் கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்

சென்னை: சென்னையில் கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மாதவரம் அருகே கல்லூரி அருகே ஆட்டோ ஒன்றில் கஞ்சா விற்கப்படுவதாக போதை பொருள் தடுப்பு புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர்கள் சோதனை மேற்கொண்டதில் தேனியை சேர்ந்த கோட்டைசாமி, சென்னையை சேர்ந்த உதயக்குமார் ஆகியோர் சேர்ந்து 40 கிலோ கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறை கண்டுபிடித்தார்கள். இந்நிலையில், கஞ்சா விற்றதாக தேனியை சேர்ந்த கோட்டைசாமி, சென்னையை சேர்ந்த உதயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரணை நடத்தி போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை கேட்ட நீதிபதி இருவர் மீதான குற்றத்தை உறுதி செய்து அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், கோட்டைசாமிக்கு ரூ.1.70 அபராதமும், உதயகுமாருக்கு ரூ.2.90 அபராதமும் என மொத்தமாக ரூ.4.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: