தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வியாபாரிகள் பணம் எடுத்து வருவதில் சிக்கல்: 2 வது வாரமாக ஈரோடு ஜவுளிசந்தை வெறிச்சோடியது

ஈரோடு: ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வியாபாரிகள் பணம் எடுத்து வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக இரண்டாவது வாரமாக செவ்வாய்கிழமை நடைபெறும் ஈரோடு ஜவுளிச்சந்தை வெறிசோடி காணப்படுகிறது. வழக்கமான வியாபாரத்தில் 20 சதவீதம் கூட இல்லை என்று ஜவுளி வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 7ம் தேதி நடைபெற இருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை ஒட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்றன.

கடந்த 18ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்றன. ரூ.50,000 அதிகமான பணத்தை எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்றது. இதற்காக நான்கு நிலை கண்காணிப்பு குழுக்கள், மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தொகுதிகளில் ஆங்காங்கே சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனைகளால் ஈரோடு ஜவுளி சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.

தென் இந்திய அளவில் புகழ் பெற்றிருக்க கூடிய ஈரோடு ஜவுளி சந்தை பொறுத்தவரையில் வாரம் தோறும் திங்கள்கிழமை இரவும் செவ்வாய்கிழமை பகலும் நடை பெற கூடிய விற்பனை என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ் நாடு மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வருகை தந்து இந்த ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வது வழக்கம் பலகோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற கூடிய இந்த பகுதியில் சிறு வணிகர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்வார்கள்.

 இது போன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இரண்டாவது வாரமாக ஜவுளி சந்தை என்பது வெறிசோடி காணப்படுகின்றது.  வழக்கமாக நடைபெற கூடிய வியாபாரத்தில் இருந்து 20 சதவீதம் கூட விற்பனை இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த விதிமுறைகளின் காரணமாக கடுமையான பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள  நிலையில் வியாபாரிகளை கடுமையாக பாத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். சில தளர்வுகள் அளித்து வியாபாரிகள் வந்து செல்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: