×

சிவன்மலை முருகன் கோயில் தை பூச தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயில் தை பூச தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலதில் கோயில்களில் மிகவும் பிரசித்திபெற்றது சிவன் மலை சுப்ரமணிய சுவாமி கோவில். நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

கடந்த 27ம் தேதி மலையடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் தேர் திருவிழாவுடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. நேற்று மலைக்கோயிலில் சிறப்பு வழிபாடும் மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் சந்நிதி முன்பு கொடியேற்றப்பட்டு மலையடி வாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சாமி சப்பரத்தில் எழுந்தருளினார். தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 5ம் தேதி தொடங்கி மலையை வலம் வந்து 7ம் தேதி நிலையை அடைகிறது.


Tags : Shivanmalai Murugan Temple Flag ,Thai Pusa Chariot Festival , Tirupur, Murugan Temple, Chariot Festival, Flag hoisting
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...