×

அதானி குழுமம் நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்துள்ள முதலீடுகளால் நஷ்டம் இல்லை: எல்.ஐ.சி. நிறுவனம் விளக்கம்

அதானி குழுமம் நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்துள்ள முதலீடுகள் குறித்து எல்.ஐ.சி. நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. ஹிண்டன் பெர்க் நிறுவனத்தின் அறிக்கை வெளியானதில் இருந்து கடந்த 4 நாட்களாக அதானி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 20% சார்ந்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் அதானி குழும நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் குறித்து எல்.ஐ.சி. உற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதானி குழும நிறுவனங்களில் ரூ.30,127 கோடி அளவிற்கு பங்குகளை இதுவரை வாங்கியுள்ளதாக எல்.ஐ.சி. நிறுவனம் கூறியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு தற்போது ரூ.56,142 கோடி-ஆக உள்ளதாக கூறியுள்ளது. கடந்த வாரம் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.81,268 கோடியாக இருந்தது.  

கடந்த 6 நாட்களில் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்துள்ள முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாப அளவு சுமார் ரூ.25,000 கோடி அளவிற்கு குறைந்துள்ளது. ஆனால் எல்.ஐ.சி வசம் உள்ள அதானி பங்குகள் அனைத்தையும் உடனடியாக விற்றால், அதற்கு ரூ.26,015 கோடி நிகர லாபம் கிடைக்கும்.

எல்.ஐ.சியின் மொத்த முதலீடுகளான ரூ.41 லட்சம் கோடியில் அதானி குழுமத்தில் 0.975% மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதானி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கடன் பாத்திரங்களுக்கனா தரவரிசை AA மற்றும் அதற்கும் அதிகமாக உள்ள கூறியுள்ள எல்.ஐ.சி அவற்றுள் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது.


Tags : Adani Group Companies l. GI RC ,L. GI RC , Adani Group, LIC The company has no loss on investments,
× RELATED எல்.ஐ.சி.யுடன் 4 பொதுத்துறை நிறுவனங்கள்...