ஆர்.எம்.கே. மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 19ம் ஆண்டு விழா, விளையாட்டு விழா

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் 19ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் நிறுவனர் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் யெலமஞ்சி பிரதீப், துணைத் தலைவி முனைவர் துர்காதேவி பிரதீப், அறங்காவலர் சவுமியா கிஷோர், ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிசாமி, வி.மனோகரன் முன்னிலை வகித்தனர்.

பள்ளி முதல்வர் வனஅரசு வரவேற்று பேசினார். விழாவில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாண், பி.ஜெயலட்சுமி சிபாஸ்கல்யான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து, கடந்தாண்டு 10ம் வகுப்பில் முதலிடம் பிடித்த பி.என்.யாழினி, 2ம் இடம் பிடித்த வி.எஸ்.சஹானா ஸ்ரீ, 3ம் இடம் பிடித்த எஸ்.மணிகண்டன், 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த எஸ்.சித்கிருஷ்ணா, 2ம் இடம் பிடித்த பி.சஞ்சனா, பெலிண்டா ஒய்.கிரேஸ், 3 ம் பிடித்த வி.கீதநாயகி ஆகியோருக்கும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

Related Stories: