×

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: போட் கிளப் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்வதால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் நாளை முதல்  வரும் 7ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை:  போட் கிளப் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் 7ம் தேதி வரை சோதனை அடிப்படை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் ஜி.கே.மூப்பனார் மேம்பால சந்திப்பிலிருந்து டி.டி.கே சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செல்லலாம்.
டி.டி.கே சாலை சந்திப்பிலிருந்து ஜி.கே மூப்பனார் மேம்பால சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மந்தைவெளியிலிருந்து கோட்டூர்புரம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு கிளப் கேட் சாலை, ஏ.பி.எம் அவின்யூ மற்றும் டர்ன் புல்ஸ் சாலை விரிவாக்கம் வழியாக இடது புறமாக செல்லலாம்.

மந்தைவெளியிலிருந்து நந்தனம் சிக்னல் சந்திப்பை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் டி.டி.கே சாலை ஸ்ரீராம் நகர் தெற்குத் தெரு மற்றும் ஜி.கே. மூப்பனார் மேம்பால சந்திப்பு வழியாக நந்தனம் செல்லலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pasumbon Muthuramalinga Devar Road , Traffic diversion on Pasumbon Muthuramalinga Dewar Road: Police notification
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி