திருமங்கலத்தில் துணிகரம் ஐடி ஊழியர் வீட்டில் 27 சவரன் கொள்ளை

அண்ணாநகர்: திருமங்கலத்தில்  ஐடி ஊழியர் வீட்டில் 27 சவரனை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருமங்கலம் கதிரவன் காலனி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (38). திருவான்மியூரில்   உள்ள ஐடி கம்பனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று திருமங்கலத்தில் உள்ள தனது மாமியாரை பார்க்க மனைவியுடன் சென்றார். இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதை பார்த்து, அக்கம் பக்கத்தினர் ராம்குமார் மற்றும்  காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போலீசார், வீட்டை சோதனை செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரே பைக்கில்  முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரனை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராம்குமார் திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: