×

கணவரை விவாகரத்து செய்த இஸ்லாமிய பெண் ஷரியத் கவுன்சிலில் பதிவு செய்த குலா சான்றிதழ் ரத்து: குடும்பநல நீதிமன்றத்தை அணுக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இஸ்லாத்தில் மனைவியரை விவாகரத்து செய்ய பின்பற்றப்பட்ட தலாக் நடைமுறையைப் போல கணவரை விவாகரத்து செய்ய மனைவியருக்கு குலா என்ற நடைமுறை ஷரியத் சட்டத்தில் உள்ளது. முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் தன்னை விவாகரத்து செய்து மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்யக் கோரி கணவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் ஷரியத் கவுன்சில் என்பது தனியார் அமைப்பு. பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் நீதிமன்றங்கள் அல்ல.

அந்த அமைப்புகள் விவாகரத்து வழங்கி சான்றிதழ் வழங்க முடியாது. ஷரியத் கவுன்சில் மனைவிக்கு வழங்கிய குலா சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது. குலா சான்றிதழ்கள் வழங்க ஷரியத் கவுன்சில் போன்ற அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து செய்யும் உரிமையை குடும்ப நல நீதிமன்றத்தை நாடி பெற வேண்டும். ஷரியத் கவுன்சில் போன்ற அமைப்பின் மூலம் பெற முடியாது. இந்த வழக்கில் இரு தரப்பினரும் தங்கள் பிரச்னைக்கு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவையோ அல்லது குடும்ப நல நீதிமன்றத்தையோ நாடி தீர்வு காணலாம் என்று உத்தரவிட்டார்.

Tags : Shariat Council ,ICourt ,Family Court , Islamic woman who divorced her husband registered with the Shariat Council canceled the Gula certificate: ICourt directs her to approach the family court.
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...