வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க 90 இ-சலான் கருவிகள், 90 மூச்சு சோதனை கருவி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை: மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களை சோதனை செய்யவும், அபராதம் விதிக்கவும் 90 இ-சலான் கருவிகள் மற்றும் 90 மூச்சு சோதனை கருவிகளை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார். சாலை விபத்துகள், சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவது முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை குறைத்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறையினர் போல, சட்டம் -ஒழுங்கு பிரிவினரும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களை சோதனை செய்யவும், அபராதம் விதிக்கவும், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு நேற்று வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 90 இ-சலான் கருவிகள் மற்றும் 90 மூச்சு சோதனை கருவிகளை வழங்கினார்.

Related Stories: