பாஜவுடன் கைகோர்ப்பதை விட நான் செத்துவிடலாம்: பீகார் முதல்வர் நிதிஷ் பேட்டி

பாட்னா: அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்காது. பாஜவுடன் கைகோர்ப்பதைவிட நான் செத்துவிடலாம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜவுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைக்கக்கூடும் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் நிருபர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதிஷ்குமார் கூறுகையில்,‘‘பாஜவுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக நான் இறந்துவிடலாம். பாஜவின் இந்துத்துவா சித்தாந்தத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் இஸ்லாமியர்கள் உட்பட ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரின் வாக்குகளையும் பெறுவதற்கு கூட்டணியை பாஜ பயன்படுத்திக்கொண்டது. பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜ கூறுவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

Related Stories: