விமான சம்பவங்கள் குறித்து உடனடி புகாரளிக்க ஏர் இந்தியா புதிய சாப்ட்வேர்

புதுடெல்லி: டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் கடந்த ஆண்டு இரண்டு சர்வதேச விமானங்களில்  3 பயணிகள் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். இந்த சம்பவங்கள் சர்ச்சைக்குண்டான நிலையில், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் குறைகளை அறிக்கையிடல் குறைபாடு தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது. இந்நிலையில் விமானத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து உடனுக்கு உடன் புகார் தெரிவிக்கும் வகையில் புதிய கிளவுட் சாப்ட்வேர் அப்ளிகேஷனை பயன்படுத்த ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் பயன்பாடு மே ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இதன் மூலம் விமானத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து உடனடியாக புகாரளிக்க உதவும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: