அறங்காவலர் நியமன விவகாரம் நிலை அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவு

புதுடெல்லி: கோயில்களில் அறங்காவளர்களை நியமிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒருங்கிணைந்த நிலை அறிக்கையை நான்கு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷித் அமைப்பை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபன்னா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக கோயில்களில் அறங்காவளர்களை நியமிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து ஒரு நிலை அறிக்கையாக நான்கு வாரத்தில் தாக்கல் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரம் ஒத்திவைத்தனர்.

Related Stories: