×

தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப்பை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரனும், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த குமரகுருபரன்,தகவல் தொழில்நுட்ப துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி மாவட்ட ஆட்சியராக ஷாஜிவாணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை ஆட்சியராக கிராந்திகுமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu Govt orders transfer of more than 30 District Collectors and IAS officers across Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...