என் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக ரஷ்ய அதிபர் புடின் மிரட்டினார்! இங்கிலாந்து மாஜி பிரதமர் பேட்டி

லண்டன்: என் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக ரஷ்ய அதிபர் புடின் மிரட்டினார் என்று இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல்கள் ஓராண்டை நெருங்கும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிபிசி ஆவணப்படத்திற்கு அளித்த பேட்டியில், ‘உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல்களை தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், என் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டினார்.

மேலும் உக்ரைன் மீதான போரால், உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை; ஆனால் ஒரு ஏவுகணையின் மூலம், அதைச் செய்ய எனக்கு அதிக நேரம் தேவைப்படாது என்று அச்சுறுத்தினார்’ என்று தெரிவித்துள்ளார். இந்த ஆவணப்படத்தில் வரும் காட்சிகள் குறித்து தற்போது போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘அவர் (புடின்) மிகவும் அமைதியான தொனியில் என்னிடம் கூறினார். நான் என்ன கூறுகிறேன் என்பதற்காக, அவர் என்னை சோதிக்க முயற்சி செய்திருக்கலாம்’ என்றார்.

Related Stories: