×

பாகிஸ்தானில் பாராளுமன்ற இடைத்தேர்தல் 3 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக: இம்ரான் கான் அறிவிப்பு

லாகூர்: பாகிஸ்தானில் 33 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மார்ச் மாதம் 16ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ, இன்சாப் கட்சி எம்.பி.க்கள் சிலரும், கூட்டணி கட்சிகள் சிலரும் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதைத் தொடர்ந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. அதன்பிறகு இம்ரான் கான் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர். அதனை பாகிஸ்தான் பாராளுமன்ற சபாநாயகர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தார். அவர்கள் தங்களது சொந்த விருப்பப்படி ராஜினாமா செய்கிறார்களா என்பதை தனித்தனியாக சரிபார்க்க வேண்டும் என கூறினார்.

பின்னர் கடந்த மாதம் 35 பேரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் பாகிஸ்தானில் 33 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. பஞ்சாப் மாகாணத்தில் 12, கைபர் பக்துன்க்காவில் 8, இஸ்லாமாபாத்தில் 3, சிந்து மாகாணத்தில் 9, பலுசிஸ்தானில் 1 என மொத்தம் 33 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் 33 தொகுதிகளிலும் இம்ரான் கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியு மான ஷா மஹ்முத் குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மார்ச் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மைய குழு கூட்டம் லாகூரில் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சியின் ஒரே வேட்பாளராக இம்ரான் கான் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.





Tags : Imran Khan ,Pakistan , Imran Khan announces that he will contest in all 3 parliamentary constituencies in Pakistan
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...