பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு

சென்னை: பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முதற்கட்டமாக புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பழைய வாக்காளர் அட்டையில் மாற்றம் எதுவும் செய்தால் புதிய அம்சங்கள் கொண்ட புதிய அட்டை வழங்கப்படும் என சாகு தெரிவித்துள்ளார். கோஸ்ட் இமேஜ் எனப்படும் புதிய அம்சம் இடம்பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

புதிய வாக்காளர் அட்டையில் QR கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் ( பூதக்கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க முடியும்). பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட்டுள்ளது. அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள் இடம்பெறும் என சாகு கூறியுள்ளார். அடையாள அட்டை முன்புறம் வாக்காளரின் புகைப்படமும், அவரது நெகட்டிவ் இமேஜ் போன்ற படமும் இடம்பெறும். போலியான அடையாள அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை வழங்கப்பட உள்ளன.

Related Stories: