திருப்பூர் சம்பவம்: பீகாரை சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய 2 பேர் 3 பிரிவுகளில் கைது

திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வட மாநிலத்தவர்கள் தாக்குவதற்காக துரத்திய வீடியோ வைரலான விவகாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரை சேர்ந்த் ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி திருப்பூரில் தமிழ்நாடு தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் காவல் ஆணையாளர் இச்சம்பவம் பற்றி கூறுகையில்,

இந்த வீடியோ முற்றிலும் வதந்தி, இது தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என தெரிவித்திருந்தார். இது போன்று வதந்தி பரப்புவோர் மீதும் மற்றும் இச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று, பீகாரைச் சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு அவர்களின் மேல் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: