×

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்துள்ளது. திரிகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு தென்மேற்கு திசையை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தெற்கு தென்மேற்கு திசையில் திரும்பி இலங்கையில் கரையை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பிப்ரவரி 1-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர்  மாவட்டங்களில் பிப்ரவரி 1-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யா வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி கற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையேயான 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department Information , In Tamilnadu, rain, chance, weather, center, information
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...