×

சத்தி புலிகள் காப்பகத்தில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 60 வகை நீர் பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

*இமயமலை நீலமேனி ஈ பிடிப்பான் பறவை அந்தியூரில் தென்பட்டது

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி வரை வெளிநாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பல வகையான பறவைகள் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் இனப்பெருக்கத்திற்காகவும் இங்கு வருவது வழக்கம்.குறிப்பாக புள்ளி மூக்கு வாத்து, வெண்கழுத்து நாரை, கருந்தலை மாங்குயில், சிவப்பு வால் காக்கை, வென் முதுகு பாரு கழுகு, சாம்பல் நிற வாலாட்டி, உள்ளிட்ட 60 வகையான பறவைகள் இங்கு வருகின்றன.ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இந்த வருடத்திற்கான கணக்கெடுக்கும் பணி நேற்று காலை துவங்கியது. முன்னதாக எந்தெந்த பகுதிகளுக்கு எத்தனை ஊழியர்கள் செல்ல வேண்டும் எத்தனை குழுவினர் செல்ல வேண்டும் என்பது குறித்த திட்டமிடல் நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தன்னார்வலர்கள் பறவை ஆர்வலர்கள் என பலரும் பங்கு பெற்றனர். மாலை வரை நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் புள்ளி மூக்கு வாத்து, வெண்கழுத்து நாரை, கருந்தலை மாங்குயில், சிவப்பு வால் காக்கை, வெண் முதுகு பாரு கழுகு, சாம்பல் நிற வாலாட்டி, உள்ளிட்ட சுமார் ஆயிரக்கணக்கான பறவைகள் உட்பட 60க்கும் மேற்பட்ட வகையான பறவை இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பிட்ட இந்த 5 மாதத்தில் இந்த பறவைகள் இங்கு பாதுகாப்பாக தங்கி இனப்பெருக்கம் செய்து அதன் குஞ்சுகளோடு பிப்ரவரி மாதம் இறுதியில் எங்கிருந்து இடம் பெயர்ந்ததோ அந்த இடத்திற்கு திரும்ப சென்று விடும் எனவும்,இந்தப் பறவைகளின் வருகை காரணமாக அவகைள் உட்கொள்ளும் பழங்களில் விதைகளை எச்சமாக போடுவதால் மரங்கள் வளர்ந்து கால நிலை மாற்ற பாதிப்பிலிருந்து வனப் பகுதிகளை இந்த பறைவகள் காத்து வருவதாகவும்,மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதி பறவைகள் வந்து தங்கி செல்வதற்கு பாதுகாப்பானதாகவும் இருந்து வருகிறது என சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரட்டுபள்ளம் அணை, அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம்  ஏரி உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வனச்சரகர் உத்ராசாமி தலைமையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று காலை தொடங்கியது.நேற்று காலை மட்டும் வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் பாம்புண்ணி கழுகு, தடித்த அலகு மீன்கொத்தி, வானம்பாடி, ஊசிவாள் வாத்து, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, தேன் பருந்து, குக்ருவாள், இருவாச்சி, செந்நீல கொக்கு, பச்சை மரகத புறா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவைகள் தென்பட்டன.

குறிப்பாக இமயமலை பகுதியில் இருக்கும் நீலமேனி ஈ பிடிப்பான் பறவை அந்தியூர் வனப்பகுதியிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தியூரின் நீர்நிலை மற்றும் வனப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து நேற்று ஒரு நாள் முழுவதும் பறவை ஆர்வலர்கள் உடன் இணைந்து வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டனர்.

Tags : Satti Tiger Reserve , Sathyamangalam: Every year from October to February in the Sathyamangalam Tiger Reserve many people from abroad and from other states
× RELATED வனத்தை விட்டு வெளியேறும் விலங்குகளை...