×

தயவு செய்து கால தாமதம் செய்யாதீர்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு வசதியாக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட ஏதுவாக பழனிசாமி இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த பழனிசாமி கோரியிருந்தார். மேலும்  தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரி முறையீடு செய்திருந்தார். அதிமுக பொதுக்குழு முடிவின்படி தேர்தல் ஆணையம் என்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு பிப்ரவரி 7 கடைசிநாள் என்பதால் அதற்குள் முடிவெடுக்கவும் எடப்பாடி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தயவு செய்து பதிலளிக்க கால தாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். தேர்தல் ஆணையத்தை எதிர்தரப்பாக சேர்க்க வேண்டும் என்ற பழனிசாமி தரப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனிசாமியின் இடையீட்டு மனு தொடர்பாக பன்னீர்செல்வமும் 3 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Tags : Supreme Court ,Election Commission ,Palaniswami ,AIADMK , AIADMK General Committee Case, Palaniswami, Election Commission, Supreme Court
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...