அதிமுக பொதுக்குழு வழக்கில் 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை எதிர் தரப்பாக சேர்க்க வேண்டும் என்ற பழனிசாமி தரப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த பழனிசாமி கோரியிருந்தார்.

Related Stories: