×

சீனா கிர்கிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு

பெய்ஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் சுயாட்சி பகுதிக்கு உட்பட்ட ஆக்சு மாகாணத்தில் ஆரல் என்ற நகரில் இருந்து தென்கிழக்கே 106 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று, கிர்கிஸ்தான் நாட்டின் பீஷ்கேக் நகரில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 726 கி.மீ. தொலைவில் அதிகாலை 5.19 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.




Tags : Kyrgyzstan ,China , Strong earthquake hits China Kyrgyzstan: 5.8 on the Richter scale
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...