×

மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாள்: காந்தியடிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் அவரது நினைவலைகள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி காந்தியடிகள் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

காந்தியும் உலக அமைப்பும் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியில் 90 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளின் வரலாறு முழுமையாக சித்தரிக்கும் விதமாக அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டனர்.  

மேலும் காந்தியடிகள் தொடர்பான குறிப்புகள் மற்றும் செய்தித்தாள்கள் அவருடைய புகைப்படங்கள் அடங்கிய செல்ஃபி பகுதியும் வைக்கப்பட்ட உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் விதமாக பொதுமக்களுக்கு ஒரு வாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Mahatma Gandhi ,Chief Minister ,M. K. Stalin ,Governor ,R. N. Ravi , Mahatma Gandhi's 76th Anniversary: Chief Minister M. K. Stalin, Governor R. N. Ravi and others pay floral tributes to the portrait of Mahatma Gandhi.
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...