×

இயக்குனர் ஆகிறார் விஜய் மகன் சஞ்சய்

சென்னை: விஜய், சங்கீதா தம்பதி மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் பட்டப் படிப்பு முடித்திருக்கிறார். இதை தொடர்ந்து அங்கு சினிமா தொடர்பான படிப்பை தொடர்ந்து வருகிறார். குறும்படங்களும் இயக்கி வருகிறார். விஜய்யும் தன் மகனுக்கு நடிப்பைவிட திரைப்படம் இயக்குவதில்தான் ஆர்வம் இருக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. ஏற்கனவே குறும்படங்களை இயக்கியுள்ள அவர், முதல் திரைப்படமாக  தனது தந்தை விஜய் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக தகவல் வெளியானது. அதை அவர் உறுதி செய்யவில்லை.

Tags : Vijay ,Sanjay , Vijay's son Sanjay is the director
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்