கூட்டணி தேடி போற வம்சம் நாங்க இல்ல... உடான்ஸ் விடும் செல்லூர் ராஜூ

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் எங்களிடம் குழப்பமே இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம். ஓபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பேன் என்கிறார். ஜனநாயக முறைப்படி அவரது அணிக்கு அறிவிக்கிறார். மக்கள் இபிஎஸ் தரப்பைத்தான் அதிமுக என நினைக்கின்றனர். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் தலைவர்கள். சின்னம் கிடைக்காததால் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று சொல்வது தவறு.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே எங்களுக்கு சாதகமாக கூறிவிட்டது. எந்த சந்தேகமும் வேண்டாம். நாங்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வேட்பாளரை நிறுத்த உள்ளோம். இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறோம். தேடிப்போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை எங்களுக்கு நிச்சயமாக இல்லை. ஒரு அண்ணன் தம்பிக்குள் பிரிவு வருகிறது. சின்ன கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஏற்கனவே உள்ள நண்பர்களை (கூட்டணி கட்சியினரை) சென்று பார்ப்பதில் தவறு ஏதுமில்லை. யாரையும் கூட்டணியில் பிடித்து வைக்க முடியாது.

எங்களை ஆதரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்கவும் முடியாது. நாங்கள் யாருக்கும் எஜமானர்கள் இல்லை. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. அதேபோல், எங்கள் கூட்டணியில் உள்ள நண்பர்களை நாங்களாக விலக்கியது கிடையாது. நேற்று இருப்பவர் இன்று இல்லை. இன்று இருப்பவர் நாளை இல்லை. எல்லாமே நல்லபடியாக நடக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த அனை த்து தேர்தல்களிலும் பாஜ கூட்டணிக்காக ஓட்டலிலும், கமலாலயத்திலும் அதிமுக தவம் கிடந்து வந்து இருக்கிறது. இதுதவிர, சிறிய கட்சிகளின் தலைவர்கள் வீட்டிற்கே சென்று ஆதரவு கேட்டு இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் கெஞ்சி வருகின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல், கூட்டணிக்கு தேடி போறவங்க நாங்க இல்லனு செல்லூர் ராஜூ உடான்ஸ் விட்டுள்ளார். 

Related Stories: