பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வீராணம் சுரங்க திட்டத்தை அனுமதிக்கக்கூடாது: ஒன்றிய அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வீராணம் சுரங்கத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என ஒன்றிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 வட்டங்களில் உள்ள புத்தூர், ஆட்கொண்டநத்தம், மோவூர், ஓமம்புலியூர், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் மிக அதிக அளவில் நிலக்கரி வளம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உழவையும், உழவர்கள் நலனையும் பறிகொடுத்து விட்டு, எந்தத் தொழில்திட்டங்களையும் செயல்படுத்தத் தேவையில்லை.

அதிலும் குறிப்பாக, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக விளைநிலங்களை பறிப்பதையும், பலி கொடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். வீராணம் சுரங்கத் திட்டத்திற்காக எந்தவிதமான ஆய்வுகளையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடத்த அனுமதிக்கக் கூடாது. இதற்காக எம்.இ.சி.எல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தமிழ் அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள் ளார்.

Related Stories: