தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியது.  வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது, மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்த பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கு வந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.

இந்நிலையில், நேற்று அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும். இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Related Stories: