×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுகவில் வார் ரூம்

சென்னை: தேர்தல் பிரச்னை பேச திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணியாற்றும் திமுக நிர்வாகிகளுக்கும், கட்சியினருக்கு உதவிடும் வகையில், திமுக சட்டத் துறையின் சார்பில், சட்டத் துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தராமன், எம்.எல்.ஏ., (99406-66269), ஈரோடு சு.இராதாகிருஷ்ணன் (98427-55335) மற்றும் வழக்கறிஞர் அர்ஜூன் (95009-92005) ஆகியோர் தலைமையில், திமுக வழக்கறிஞர்கள் அடங்கிய  வார் ரூம் அமைக்கப்படுகிறது. தேர்தல் பணியாற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தோழர்கள் தேர்தல் குறித்த சட்டப் பிரச்னைகள் தொடர்பாக உடனுக்குடன் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.


Tags : DMK ,Erode East , Erode East Constituency, By-Election, War Room in DMK
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்