×

யு19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

போட்செஃப்ஸ்ட்ரூம்: யு19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அறிமுகத் தொடரிலேயே இந்திய அணி சாம்பியனானது.

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழத்தி பைனலுக்கு முன்னேறின.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதல பந்து வீசியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களி வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா 15 ரன்களிலும், ஸ்வேதா செராவத் 5 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். கோங்காடி த்ரிஷா 24 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். சௌமியா திவாரி 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களை எட்டி வெற்றி பெற்று உலகக்கோப்பையை தட்டி சென்றது.



Tags : U19 Women's World World World Cup ,India , U19 Women's World Cup final: India beat England by 7 wickets to become champions!
× RELATED சொல்லிட்டாங்க…