அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி: ஒரு வாரத்தில் 12 பேர் மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அடுத்த பெவர்லி கிரெஸ்ட் பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘வாகனத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தேடி வருகிறோம். கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 முறை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இரண்டாவது முறையாாக துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதுவரை கடந்த ஒரு வாரத்தில் 12 பேர் துப்பாக்கி சூட்டால் பலியாகி உள்ளதாகவும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: